வியாழன், 21 ஜூலை, 2011

பகற் கிரணம்.

ஆற்றலுள்ள
அறிவற்ற சிறுவனாய்...
அறிவுள்ள
ஆற்றலற்ற முதியவனாயன்றி
இரண்டும் ஒன்றித்த பருவம்
உன்னுடையது...


மத்திம பகலின் சூரியக் கிரணங்களாய்...
உஷ்ணமும்
வெளிச்சமும் மிக்கது
உன் இளமை..!


உனக்கொரு வழியை
நீ சிந்தி..!
பாத்திரம் கவிழ்ந்து
சிந்தும் நீர்த்துளிகளாய்...
உன் வாழ்க்கையும்
சிந்திவிடக்கூடாது தோழா..!


நரைத்த பின்
சாதிக்க நினைக்கிறாயா?
நீர் வற்றிய கிணற்றல்
இறைக்க நினைக்கிறாய்..!


இளமையில்
இமயம் தொட முனை!
நதியைப் போல்
நீர் அறியாமலேயே
வெற்றிக் கடலை அடைவாய்..!


20080408
(பயிற்சி ஊடவியலாளர்கள் ஒன்றுகூடலில்
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வாசித்த கவிதை)

1 கருத்து: