ஞாயிறு, 3 ஜூலை, 2011

மதம் !?

என் பிரதேசத்தையே
எனக்குப் பிற தேசமாக்கினாய்...


என் ஆன்மாவைச்சுற்றிய
புலன்களை புலம் பெயர்த்தாய்...


சாயங்கால  நிற உடம்பை
காயங்களால் நிறப்பினாய்...


மதம் பார்த்தே
பதம் பார்த்தாய்...


 

ஆடை பார்த்துச் சூடுவைத்தாய்!?
ஆடைக்குள்  நான் இருப்பதை மறந்து


கடைசியாய்... 

விட்டுவிடு!!

என் ரத்தம் தோய்ந்த கோவணமாவது
வரலாற்று ஆவணமாக இருக்கட்டும்.

20070525
(படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக