வியாழன், 21 ஜூலை, 2011

நபிவழி, வெற்றிக்கு வழி!


நர பலி கொண்ட
பல் வழிபாடு கண்டு
இரு விழிசிந்தி ஹிராவில்
பல் வலிபட்டு வளர்த்த
நல் வழி அவர் வழி
எவ்வழி அவர் வழியோ
அவ் வழி நேர்வழி
அதுவே வெற்றிக்கு வழி


20090309
சீறா சிறப்பிதழ்
றாபிதா கலமியா

றமழானே..!

நீ வருடங்களின்
பிரசவ காலம்
நன்மைகளைப்
பெற்றுத்தருகிறாய்...


நீ மின் விசிரியின்
'ஓப்' பட்டன்
சுற்றிய சாத்தான்கள்
ஓய்ந்திருக்கின்றன.


நீ வருடங்களின்
புது வாசனை
நரகங்கள் மூக்குகளை
அடைத்துக் கொள்கின்றன.


நீ வருகிறாய்...
சந்தோஷிக்கிறோம்.
சலவை செய்கிறாய்...
சமனாகிறோம்.


நீ போகிறாய்...
நாம் கைகாட்ட முடியாமல்
கை நிறைய நன்மைகளுடன்
தவிக்கிறோம்.


இறைவா!
றமழானை அனுப்பிவை
மெதுவாக.. மிக மெதுவாக
எங்களை விட்டும்.


கவிதை பூங்கா
தினகரன்.

பகற் கிரணம்.

ஆற்றலுள்ள
அறிவற்ற சிறுவனாய்...
அறிவுள்ள
ஆற்றலற்ற முதியவனாயன்றி
இரண்டும் ஒன்றித்த பருவம்
உன்னுடையது...


மத்திம பகலின் சூரியக் கிரணங்களாய்...
உஷ்ணமும்
வெளிச்சமும் மிக்கது
உன் இளமை..!


உனக்கொரு வழியை
நீ சிந்தி..!
பாத்திரம் கவிழ்ந்து
சிந்தும் நீர்த்துளிகளாய்...
உன் வாழ்க்கையும்
சிந்திவிடக்கூடாது தோழா..!


நரைத்த பின்
சாதிக்க நினைக்கிறாயா?
நீர் வற்றிய கிணற்றல்
இறைக்க நினைக்கிறாய்..!


இளமையில்
இமயம் தொட முனை!
நதியைப் போல்
நீர் அறியாமலேயே
வெற்றிக் கடலை அடைவாய்..!


20080408
(பயிற்சி ஊடவியலாளர்கள் ஒன்றுகூடலில்
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வாசித்த கவிதை)

திங்கள், 4 ஜூலை, 2011

நட்பு.









தயவு செய்து
என் முன்னால்
செல்லாதே..!
நான்
உன்னை பின்பற்றுபவனல்ல.

தயவு செய்து
என் பின்னால்
வராதே..!
நான்
உன்னை வழிநடத்துபவனல்ல.

என் தோளோடு தோள்
சேர்ந்து வா
ஏனெனில் நீ,
என் அன்புத்தோழன்.

தமிழில்...
கவிஞர்
இஸ்பஹான் சாப்தீன்.

(ஆங்கிளக் கவிதையொன்றின் தழுவல்)

www.isbahan.blogspot.com

இது என் அழகிய வாழ்க்கை.......!



இது என் அழகிய வாழ்க்கை.......!
ஒரு நாள்.....,
கண் திறந்தேன்;
எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்;
நான் மட்டும் அழுதேன்.

ஒரு நாள்.....,
கண் மூடுவேன்;
எல்லோரும் சோகமாக அழுவார்கள்;
நான் மட்டும் சிரிப்பேன்.






(அல்லாஹ் என் மீது அன்புள்ளவன்)

நானாகவும் வாழ வேண்டும்.

நீங்கள்
எதை வேண்டுமானாலும்
பேசலாம்....
எல்லாவற்றையும்
நான் கேட்பேன்.

Isbahan Sharfdeen

நீங்கள்
எதை வேண்டுமானாலும்
சொல்லலாம்....
ஆனால்,
எல்லாவற்றையும்
என்னால் செய்ய முடியாது.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

மனம்.

மதங்களை தாண்டி
மனங்களை நேசித்தேன்
மனிதர்கள் எனக்கு
நண்பர்களாகக் கிடைத்தார்கள்.

2010

மதம் !?

என் பிரதேசத்தையே
எனக்குப் பிற தேசமாக்கினாய்...


என் ஆன்மாவைச்சுற்றிய
புலன்களை புலம் பெயர்த்தாய்...


சாயங்கால  நிற உடம்பை
காயங்களால் நிறப்பினாய்...


மதம் பார்த்தே
பதம் பார்த்தாய்...


 

ஆடை பார்த்துச் சூடுவைத்தாய்!?
ஆடைக்குள்  நான் இருப்பதை மறந்து


கடைசியாய்... 

விட்டுவிடு!!

என் ரத்தம் தோய்ந்த கோவணமாவது
வரலாற்று ஆவணமாக இருக்கட்டும்.

20070525
(படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை)